Announcements

இந்திய ஆய்விதல் (மின்னியல்) ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கின்றது

அனைவருக்கும் வணக்கம்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் 65 ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும், இந்திய ஆய்வியல் துறையின் கீழ், 1983-ஆம் ஆண்டு முதலாக வெளியீடு கண்டுவருவது இந்திய ஆய்விதல் ஆய்வேடு. இவ்வாய்வேடு தமிழ், ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், நூலாய்வுகள், நூல்விமர்சனங்கள் ஆகியவற்றைப் பிரசுரித்து வந்துள்ளது. இதுவரை 13 இதழ்கள் வெளியீடு கண்டுள்ளன. தற்போது 14-ஆம் இதழ் பிரசுரமாக உள்ளது. இவ்விதழுக்கான ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. படைப்பாளர்கள் தரமான ஆய்வுக்கட்டுரைகளை இவ்விதழில் பிரசுரிக்க அழைக்கப்படுகின்றனர்.

இவ்விதழ் ISSN-டன் வெளிவருகின்றது. இதில் இடம்பெறும் கட்டுரைகள் மின்னியல் அடையாள குறியிலக்க எண்ணோடு (DOI) இடம்பெறும். மலேசிய உயர்கல்வி அமைச்சால் அங்கிகரிக்கப்பட்ட மைசைட் மற்றும் மை ஜர்னர் (MyCite/MyJurnal) பிரிவினில் இடம்பெற்றுள்ள ஏ (A) தகுதி பெற்ற ஆய்விதழ் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்விதழுக்கான ஆய்வுக்கட்டுரைகளைப் பேராசிரியர்கள், துறைவல்லுநர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களிடமிருந்து வரவேற்கின்றோம். கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் அல்லது மலாய் மொழிகளில் எழுதப்படலாம். கட்டுரைக்கான தேவைகள் அதன் நெறிமுறைகள் பற்றிய தகவல்களை இவ்விதழின் அகப்பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

கட்டுரைகள் 10 முதல் 15 பக்கங்கள் வரை எழுதப்படலாம். ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுக்கட்டுரைகளையும் அனுப்பலாம். தமிழ், மொழி, மொழியியல், இலக்கியம் மட்டுமல்லாது ஏனைய துறைச்சார்ந்தவர்களும் கட்டுரைகள் வழங்கலாம்.

இவ்விதழின் அகப்பக்கத்தில் சேர்க்கப்படும் கட்டுரைகள் யாவும் நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் தரமான ஆய்வுக்கட்டுரைகள் வெளியீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

கட்டுரை ஆசிரியர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரையோடு, ஆய்வாளர்கள், தன்விபரம், ஆய்வுச்சுருக்கம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), திறவுச்சொற்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), துணைநூற்பட்டியல் (APA 6th Version) இணைத்து அனுப்ப வேண்டும். இவ்விதழுக்கான கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதிநாள், 31.3.2021 ஆகும். எனினும், கட்டுரை ஆசிரியர்கள் வருடம் முழுவதும் கட்டுரைகளை அனுப்பலாம். ஏற்புடைய கட்டுரைகள் அடுத்தடுத்த வெளியீடுகளுக்குப் பரிசீலிக்கப்படும்.

கீழ்க்காணும் அகப்பக்கத்தில் இந்திய ஆய்விதழ் (மின்னியல்) தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

https://ejournal.um.edu.my/index.php/JIS/about

ஏனைய தகவல்கள் பெற கீழ்க்காணும் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்;

Department of Indian Studies,
Faculty of Arts and Social Sciences,
University of Malaya,
50603 Kuala Lumpur,
Malaysia.
தொலைப்பேசி: +603 79675510; மின்னஞ்சல்:rmohana_dass@um.edu.my, rmdassa@gmail.com
kanmani@um.edu.my
Call for Articles for Journal of Indian Studies

Greeting to everyone.

The Department of Indian Studies that was established in 1956 at the University of Malaya has been publishing Journal of Indian Studies since 1983. So far, it has published 13 volumes. The journal publishes research articles, criticism, and book reviews in Tamil, English and Malay. The Journal of Indian Studies (JIS) is currently seeking for quality articles for its 14th volume. It welcomes research papers from researchers all over the world to publish quality research papers in this journal.


The JIS is published with an e-ISSN. All accepted articles will be assigned with DOI as well. We are pleased to announce that this journal is indexed in the MyCite and MyJournal that approved by the Education Ministry of Malaysia. The journal welcomes research articles/papers from professors, experts and research students for the current issue. The articles can be written in Tamil, English or Malay with length of 10 to 15 pages. Apart from Tamil and Indian Languages, Linguistics (Indian) and Tamil and Indian Literature, articles from other disciplines are also welcomed. Additional requirements for article submission, i.e., article specifications, submission and publication ethics can be reached at the webpage of the journal.

All submitted articles will be reviewed by the editorial board. The selected quality research papers will be accepted for publication.

Authors are required to enclose their article/s with a short Biodata, Abstracts (Tamil and English), Keywords (Tamil and English), and References (APA 6th Version). The last date for submitting article for the current issue is 31.3.2021. However, authors can submit their articles throughout the year. Relevant articles will be considered for subsequent publications.

Further information of Journal of Indian Studies (Online) can be obtained from the following site.

https://ejournal.um.edu.my/index.php/JIS/about

Authors can contact us at the below address if further information were needed;

Department of Indian Studies,
Faculty of Arts and Social Sciences,
University of Malaya,
50603 Kuala Lumpur,
Malaysia.
Phone: +603 79675510;
Email: rmohana_dass@um.edu.my/rmdassa@gmail.com
kanmani@um.edu.my