தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகளின் அடிப்படையில் 'நான் பெண்தான்' (மலேசிய சிறுகதைகள்) பெறும் இடம் ஓர் ஆய்வு (Elements of Poetic in the Malaysia Short Stories (I am a Woman))
Keywords:
மெல்லிய பிரம்பு, பெரிய வளாகம், மீபிரட்டல், மனநோய், மனநிலை சரியில்லாதவர்கள் வசிக்கும் இடம், Tamil Short Story, Tamil Literature, Tolkappiyam and Literary TheoriesAbstract
At the end of the twentieth century and the beginning of the twenty-first century, new traditions of thought about Tokappiyam began to develop among researchers. It can also be the logic of rhetoric such as re-reading, revisiting, rethinking, and reframing the text. The research by P. Mathayan towards sociology, the articles written by A. Ramasamy, combining the geography culture with the theory of theory, and the books written by D. K. Ravichandran who combined psychology and archaeological metaphysics, and the studies of K. Jawahar who read together the theory and ecology and the studies of Tamil literature of Kerala University by T. Vijayalakshmi, also referred in this study. The book of theory of Tamil Literature also seems to have stimulated a new trend of thought. Based on them, the short stories in the "I am a woman" short story anthology from Malaysia have been studied using the elements of the TSE.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொல்காப்பியம் குறித்த புதிய சிந்தனை மரபுகள் ஆய்வாளர்கள் மத்தியில் வளரத் தொடங்கின. இது மறுவாசிப்பு, மீள்பார்வை, மாற்றுச்சிந்தனை, மீட்டுருவாக்கம் போன்ற சொல்லாடல்களின் தாக்கமாகக் கூட இருக்கலாம். பெ.மாதையன் சமூகவியல் நோக்கில் எழுதிய ஆய்வு நூல்களும், நிலவியல் பண்பாட்டைத் திணைக் கோட்பாட்டுடன் இணைத்து, அ.ராமசாமி எழுதிய கட்டுரைகளும் உளவியலையும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலையும் இணைத்து நூல்கள் எழுதிய தி.கு.ரவிச்சந்திரனும், திணையும், சூழலியலையும் சேர்த்து வாசிக்கும் க.ஜவஹரின் ஆய்வுகளும் கேரளப் பல்கலைக் கழக தமிழாசிரியர் த.விஜயலட்சுமியின் 'தமிழ் இலக்கியக் கோட்பாடு என்ற நூலும் புதிய சிந்தனைப் போக்கைத் தூண்டியுள்ளன எனலாம். இதன் அடிப்படையில் மலேசியாவில் இருந்து வெளிவந்துள்ள 'நான் பெண்தான்' என்ற சிறுகதைக் களத்தில் உள்ள ஒன்பது சிறுகதைகளும் ஆய்வுக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தொல்காப்பிய செய்யுள் உறுப்புகளை பொருத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.