திருமுறைகளில் பெண்கள் (Women In Thirumurai)
Keywords:
Women, Periyapuranam, Panniru Thirumurai, பெண்கள், பெரிய புராணம், பன்னிரு திருமுறைAbstract
Saivism is the interpretation of Lord Shiva as the supreme God. Saivism is a very ancient and proud religion; a time of great antiquity. The people of the world are well aware of the glory of the Saiva religion, which has the power to guide the world and heal people. Saivism principles are based benefactors have graced numerous books praising and explaining the essence of Lord Shiva. Among them, the books which are devoted to Lord Shiva are called Thothira books and the books which explain the doctrines of Saivism are called Saathira books. Among the Saathira texts, the fourteen Meikanda Sathiras and the Panniru Thirumurai of the Thothira texts are highly distinguished. In Saivisme, the Panniru Thirumurai are the most prominent among the sacred texts of Saivism. The Panniru Thirumurai are arranged in their respective positions and are excellent in terms of music and pleasure. Recite the prayers with religious vision; Learn with a philosophical vision; You can learn and enjoy many historical news with historical vision; Explore with community vision and learn about the art, civilization and culture of Tamils. The dedication of the women of their families is to be considered behind the success of their sacrifice of these Panniru Thirumurai benefactors. In this way, the main purpose of this article is to compile the messages related to women's commitment found in the Panniru Thirumurai.
சிவப்பரம்பொருளை முழுமுதற் கடவுளாகக் கொண்டு விளங்குவது சைவ சமயம். இச்சைவ சமயம் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த சமயம்; தொன்மைப்பெருமை கொண்ட சமயம். உலகுக்கு நல்வழி காட்டி மக்களை உய்விக்கும் ஆற்றல் பெற்ற இச்சைவ சமயத்தின் பெருமையை உலக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். சிவனெறி சார்ந்த அருளாளர்கள், சிவப்பரம்பொருளை வாழ்த்தியும் விளக்கியும் எண்ணிறைந்த நூல்களை அருளிச் செய்துள்ளனர். அவற்றுள் சிவப்பரம்பொருளை வாழ்த்துவதாக அமைந்த நூல்கள் தோத்திர நூல்கள் எனவும் சைவ சமயக் கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் சாத்திர நூல்கள் எனவும் கூறப்படும். சாத்திர நூல்களில் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களும் தோத்திர நூல்களில் பன்னிரு திருமுறைகளும் உயர்தனிச் சிறப்புப் பெற்றவையாகும். சிவநெறியில், சைவ சமயத்தின் பிரமாண நூல்களாகப் போற்றப்படுவனவற்றுள் தலைச்சிறந்தவை பன்னிரு திருமுறைகள் ஆகும். பன்னிரு திருமுறைகள் ஏழிசையாய், இசைப் பயனாய், இன்னமுதாய், அவற்றின் நிலைக்களனாய் அமைந்து சிறந்து விளங்குகின்றன. திருமுறைகளைச் சமயக்கண் கொண்டு அன்புடன் ஓதி இன்புறலாம்; தத்துவக்கண் கொண்டு பயின்று, ஆய்ந்துணர்ந்து மகிழலாம்; வரலாற்றுக்கண் கொண்டு நோக்கிப் பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து இன்புறலாம்; சமுதாயக்கண் கொண்டு ஆராய்ந்து தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி நன்கு அறியலாம். இத்தகு போற்றுதலுக்குரிய பன்னிரு திருமுறை அருளாளர்களின் திருப்பணி வெற்றிக்குப் பின்னால் அவரவர் குடும்பப் பெண்களின் அர்ப்பணிப்புக் கருத்தில் கொள்வதற்குரியது. அவ்வகையில் பன்னிரு திருமுறைகளில் காணப்படும் பெண்களின் அர்ப்பணிப்புத் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.